மைடின் மால் USJ 1 இல் PPP சிலாங்கூரின் ஜாலூர் ஜெமிலாங் கொடி வழங்கும் விழா விமரிசையாக நடைபெற்றது!





சுபாங் ஜெயா, ஆக 17-
நாட்டின் 68 ஆவது மெர்டேக்கா தின கொண்டாட்டத்துடன் இணைந்து மைடின் மால் USJ 1 வளாகத்தில் ஜாலூர் ஜெமிலாங் கொடிகளை வழங்கும் விழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மலேசியா முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியுடன் இணைந்து, PPP சிலாங்கூர் உள்ளூர் சமூகத்திற்கு 1,000 ஜாலூர் ஜெமிலாங் கொடிகளை தேசபக்தி மற்றும் தாய்நாட்டின் மீதான அன்பின் அடையாளமாக விநியோகித்துள்ளது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்ததற்காக YBhg டத்தோ அமீர் மற்றும் மைடின் மால் நிர்வாகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles