
ரோட் டு சாம்பியன் 2026” திட்டத்தின் தொடக்க விழாவும், செலாங்கூர் சுக்மா அணியின் தந்தைத் (Bapa Angkat) நியமனக் கடிதம் வழங்கும் விழாவும் சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2025 நடைபெற்றது.
இந்த விழாவில், கோத்தா கெமுனிங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரீகாஸ் சம்புநாதன் அவர்கள், சிலம்பம் விளையாட்டுக்கான தந்தை (Bapa Angkat) ஆக நியமிக்கப்பட்டு, நியமனக் கடிதத்தைப் பெற்றார்.
கோத்தா கெமுனிங் தொகுதி அலுவலகம், சிலம்பம் அணியுடன் எப்போதும் நின்று, முழு உறுதிப்பாட்டுடனும் உற்சாகத்தையும் வழங்கி, பயிற்சி நேரங்களில் இருந்து போட்டி நாள்வரை ஆதரவு அளித்து வர உறுதியளிக்கிறது.