மலேசியர்கள் உடனடியாக MyDigital IDக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்


புத்ராஜெயா, ஆகஸ்ட் 22 –
 எதிர்காலத்தில் ஒற்றை உள்நுழைவு முறை முழுமையாக செயல்படுத்தப்படும் போது, இரண்டு முக்கிய அரசாங்க தளங்களுக்கு சீரான அணுகலை உறுதி செய்வதற்காக மலேசியர்கள் உடனடியாக MyDigital IDக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அந்த இரண்டு முக்கிய தளங்கள் MyJPJ மற்றும் MyBayar PDRM ஆகும். இரண்டு தளங்களும் ஏற்கனவே MyDigital ID உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதோடு பயனர்கள் தங்கள் தற்போதைய கடவுச்சொல் அல்லது MyDigital ID ஐப் பயன்படுத்தி உள்நுழைய தேர்வு செய்யலாம் என MyDigital ID தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹிஷாம் நிக் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஒவ்வொரு பயனரும் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்புடன் அதிகபட்ச வசதியை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதே நேரத்தில் நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை உள்ளடக்கிய மற்றும் மீள்தன்மை கொண்ட முறையில் துரிதப்படுத்துகிறோம் என்று வெளிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சுட்டிக்காட்டினார்.

MyDigital ID, எந்தவொரு தனிப்பட்ட தரவையும் சேமிக்காமல், அரசாங்கத்தின் தேசிய பதிவுத் துறை தரவுத்தளத்தின் மூலம் பயனர்களின் அடையாளங்களை துல்லியமாகவும் வெளிப்படையாகவும் சரிபார்க்கிறது. ஒவ்வொரு பயனரும் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்புடன் அதிகபட்ச வசதியை அனுபவிப்பதை உறுதி செய்யப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles