
கோலாலம்பூர், டிச.30-
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் விலகியுள்ளார்.
டான்ஸ்ரீ மொகிதீனின் விலகலை பெர்சத்து பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி, தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ துன் பைசால் இஸ்மாயில் அஜிஸ் ஆகியோர் உறுதி செய்தனர்.
முன்னாள் பிரதமரான அவர் நேற்று இரவு கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களின் வாட்சாப் குழுவில் இந்த அறிவிப்பை பற்றித் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதனிடையே கட்சியின் உள் வட்டாரத்தில் ஒருவர், டான்ஸ்ரீ மொகிதீன் தேசியக் கூட்டணி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை உறுதி செய்ததாக துன் பைசால் தெரிவித்தார்.

