
நான் பத்துமலைக்குச் சென்று, மலேசிய இந்து ஆலய – இந்து அமைப்புகளின் பேரவையின் (MAHIMA) தலைவர் டத்தோ ந.சிவகுமார் அவர்களுடன் ஆலய நிர்வாகச் சிக்கல்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தைப்பூசத் திருவிழா கொண்டாட்டங்களைப் பற்றி கலந்துரையாடினேன்.
இக்கலந்துரையாடலில், நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம். நிர்வாகக் கட்டமைப்பு, செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் நிர்வாக மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காக ‘ஆலய நிர்வாக புளூபிரிண்ட்’ (Blueprint) ஒன்றை தயாரிப்பதன் அவசியம் உட்பட சில ஆரம்பக்கால பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.
மக்களிடையே உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதிலும், மலேசியாவில் உள்ள அனைத்து மதங்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையை உறுதி செய்வதிலும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்தினேன்.
மலேசியா பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட ஓர் அமைதியான நாடாகும். இந்தப் பன்முகத்தன்மை நாம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், நம்பிக்கையை வளர்க்கவும் மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும் ஒரு சக்தியாக அமைய வேண்டும் என்று ஒற்றுமை துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் தெரிவித்தார்

