
கோலாலம்பூர், ஜன 1-
இன்று 2026 புத்தாண்டை முன்னிட்டு
பத்துமலை திருத்தலத்தில் வீற்றிருக்கும் தமிழ் கடவுள் 140 அடி உயரம் கொண்ட முருகப் பெருமானுக்கு பன்னீர் அபிஷேக விழா இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.
ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் முயற்சியில் 140 அடி உயர முருகன் சிலை பத்துமலையில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
தற்போது இச்சிலை உலக மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு இம்முருகப் பெருமானுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வகையில் 20ஆம் ஆண்டு பன்னீர் அபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், மஹிமா தலைவரும் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவக்குமார் , அறங்காவலர் சந்திரசேகரன் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

