


செ.வே.முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர், ஜன 1-
2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் (Kortumalai Pillaiyar Temple) மக்கள் கூட்டம் அலைமோதியது.
காலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
சிவஸ்ரீ சிவகுமார் மற்றும் சிவஸ்ரீ சிவனாந்தா குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற்றது.
புதிய ஆண்டின் தொடக்கங்கள், நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் தடைகளை நீக்குவதற்கான பிரார்த்தனைகளை உள்ளடக்கியது.
பக்தர்கள் புதிய ஆண்டின் தொடக்கத்தில் விநாயகரின் அருளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.
அந்த வகையில் இன்று காலையிலேயே ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்றனர்.
பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கப்பட்டது.

