
ஷா ஆலம், ஜன 1-
சிலாங்கூர் மாநிலத்தில் முழுமையான நில உரிமைப் பதிவுகளைக் கொண்டிராத பத்து தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளுக்கு (SJKT) நிலப்பட்டா அண்மையில் வழங்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது.
சிலாங்கூர் மாநில மனித வளம், வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு மேற்கொண்ட இந்த முயற்சியை பெரிதும் வரவேற்பதாக சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
SJKT தெலோக் பாங்லிமா காராங், SJKT ஜென்ஜாரோம், SJKT சிம்பாங் மோரிப், SJKT சீஃபீல்ட் தோட்டம், சுபாங் ஜெயா, SJKT PJS 1, பெட்டாலிங் ஜெயா, SJKT காஜாங், SJKT பெர்சியாரான் ராஜா மூடா மூசா, பெலாபுஹான் கிள்ளான், SJKT Fes செர்டாங், SJKT துன் சம்பந்தன், சுபாங் ஜெயா மற்றும் SJKT பெஸ்தாரி ஜெயா ஆகிய பள்ளிகளுக்கு இப்போது நிலப்பட்டா கிடைத்துள்ளது.
இது தவிர
சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, பந்திங் தெலுக் டத்தோ தமிழ்ப் பள்ளி, சீ போர்ட் தமிழ்ப் பள்ளி, பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளி, பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி, வெஸ்கண்ட்றி தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கி இருக்கும் நிலப் பிரச்சனைகளுக்கு சுமுகமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாப்பா ராயுடு கூறியுள்ளார்.
கூடிய விரைவில் இந்த தமிழ்ப் பள்ளிகளுக்கும் நல்லதொரு முடிவு கிடைக்கும் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி பெரிதும் நம்புகிறது.
சிலாங்கூர் மாநில அரசின் சிறப்பான ஆதரவோடு தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று டாக்டர் சுரேந்திரன் தமது புத்தாண்டு வாழத்து செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே அண்மையில் நடைபெற்ற மைபெமிலி குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்றுகூடல் விழாவில் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

