
கோலாலம்பூர் டிச 30-
பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் பதவியை டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நேற்று இரவு ராஜினாமா செய்தார்.
இந்நிலையில்
பொதுச் செயலாளர் பதவியை டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ராஜினாமா செய்ததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அறிவிப்பை அவர் சற்றுமுன் முகநூலில் பகிர்ந்துள்ளார்.
பி.என். தலைவர் பொறுப்பில் இருந்து டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் விலகினார்.
அவரை பின் தொடர்ந்து பல தலைவர்கள் அக்கூட்டணியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர்.
இந்நிலையில் அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.
மேலும் எனது பதவி விலகல் வரும் ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வரும்.
எனக்கு உறுதுணையாக இருந்து கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் எனது நன்றி என அஸ்மின் அலி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

