



ஈப்போ, செப்.5: வரலாற்று சிறப்புமிக்க ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் ஹிஜ்ரி 1447 (2025) ஆம் ஆண்டின் மவ்லீதுர் ரசூல் தினத்தை முன்னிட்டு சிறப்புமிக்க “ஒற்றுமை ஊர்வலம்” சிறப்பாக மிதமான அளவில் நடைபெற்றது.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த இந்த ரபியுல் அவ்வல் மாதம் பிறை ஒன்றில் இருந்து 13 வரையிலும் ஒவ்வொரு நாளும் இரவு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாற்று சிறப்புகளை தொடராக பேசப்பட்டது.
அதனுடைய இறுதியாக 05-09- 2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பேராக் மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்து மக்கள் கலந்து கொண்டார்கள். சுமார் 600 பேர்கள் ஆண்கள் பெண்கள், இளைஞர்கள், சிறார்கள், எல்லோரும் நபி நேசத்தை வெளிப்படுத்தினார்கள்.
உலக மக்கள் அனைவருக்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது
என்ற தகவலை ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. அடுத்தாண்டு மேலும் சிறப்புடன் நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

