Piala Dun Kota Kemuning கால்பந்து போட்டியில் புக்கிட் கெமுனிங் தேசிய பள்ளி சாம்பியன்!

ஷா ஆலம், செப் 8-
கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற ஆரம்ப பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியில் புக்கிட் கெமுனிங் தேசிய பள்ளி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்த போட்டியில் மொத்தம் 16 ஆரம்ப பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் எமரெல்ட், ஹைக்கோம், சீபீல்ட் ஆகிய தமிழ்ப் பள்ளிகள் மற்றும் இரண்டு சீனப் பள்ளிகள் கலந்து கொண்டன.

லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு புக்கிட் கெமுனிங் மற்றும் ஆலம் மேகா 27 பள்ளிகள் தேர்வு பெற்றன.

இதில் புக்கிட் கெமுனிங் தேசிய பள்ளி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் காலையில் சிறப்பு வருகை தந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

பின்னர் பிற்பகலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மீண்டும் கலந்து கொண்ட அவர் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.

ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி மற்றும் கிராம தலைவர் கோபி, சரவணன், சாரா ஆகியோர் உட்பட பலரும் இந்த போட்டி வெற்றி பெற முழு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles