தாளவாடப் பொருட்களுக்கு 40 ஆயிரம் வெள்ளி காசோலையை சுங்கைபட்டாணி நாடாளுமன்றம் வழங்கியது.

சுங்கைபட்டாணி செப்12-இங்குள்ள ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மண்டபத்திற்கு தளவாடப் பொருட்களான நாற்காலி மேஜைகள் வாங்குவதற்கு ரிங்.ம. 40ஆயிரம் காசோலையினை சுங்கைபட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் தஃபிக் தான்ஶ்ரீ ஜொகாரி வழங்கினார்.

நேற்று தேவஸ்தானத்திற்கு வந்திருந்த அவர் ரி.ம40ஆயிரம் மாதிரி காசோலையினை தேவஸ்தான பொருளாளர் ந.பத்மநாதனிடம் அவர் வழங்கினார்.

தேவஸ்தானத் தலைவர் பெ.இராஜேந்திரன், துணைச் செயலாளர் மு.இராதகிருஷ்ணன் மற்றும் செயலவை உறுப்பினர்களும்,சுங்கைபட்டாணி நாடாளுமன்ற இந்தியர் பிரிவுக்களுக்கான பிரதிநிதி தமிழரசு மற்றும் பிகேஆர் கட்சியின் இந்திய மகளிர் பிரிவினர் ஆகியோர் இந்த மாதிரி காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles