

தித்திக்கும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று புக்கிட் மெர்தாஜாமில் பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பிறை குடும்ப மகளிர் மேம்பாட்டு கழகமும் இணைந்து இந்த தைப்பொங்கல் விழாவுக்கு மெருகூட்டியது.
பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ சங்கர் தலைமையில் மகளிர் கள் மற்றும் பினாங்கு இந்திய பெண்கள் கால்பந்து வீராங்கனைகள் ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மத்தியில் சிறுவர்களின் உறுமி மேள கச்சேரி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

