மித்ராவை நேரடியாக டத்தோஸ்ரீ இரமணன் கவனிப்பார்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 16-
மித்ராவின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில்தான்
டத்தோஸ்ரீ ரமணனுக்கு தற்போது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

இந்திய சமுதாயம் நேரடியாக பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் தான் மித்ராவின் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மித்ராவுக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மித்ரா செயற்குழுவின் நடவடிக்கைகளை நான் நேரடியாக பார்க்கவில்லை.

இதன் அடிப்படையில் தான் அதனை கண்காணிக்கும் பொறுப்பு டத்தோஸ்ரீ ரமணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சராக இருக்கும் அவர் தற்போது மித்ரா நடவடிக்கைகளையும் பார்த்துக் கொள்வார்.

இதற்காக பிரபாகரன் நீக்கப்பட்டார் அல்லது செயற்குழு கலைக்கப்பட்டது என்று அர்த்தமாகி விடாது.

மித்ரா செயற்குழு இருந்தாலும் இல்லையென்றாலும் 100 மில்லியன் ரிங்கிட் இந்திய மக்களை சென்றடைய வேண்டும்.

இது தான் அரசாங்கத்தின் முதன்மை இலக்காக உள்ளது என்று இன்று பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் டத்தோஸ்ரீ இரமணன், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles