நவ 16 இல் மஇகா பொதுப் பேரவை! தேமு தலைவரை அழைக்கவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறுகிறார்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் அக் 16.
வரும் நவம்பர் 16 ஆம் தேதி மஇகா தேசிய பொதுப் பேரவை நடைபெறுகிறது என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ள தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடியை நாங்கள் அழைக்க போவது இல்லை.

வழக்கமாக பிரதமர் எங்கள் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்.

ஆக இம்மாநாட்டை நான் தான் தொடக்கி வைப்பேன் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு 27,000 உதவிப் பொருட்களை மஇகா வழங்கியது.

இதை தவிர்த்து பல இடங்களில் கூடுதலாக உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

அடுத்தாண்டு இதை ஒருமுகப்படுத்தி கிட்டத்தட்ட 50 ஆயிரம் உதவிப் பொருட்களை வழங்க மஇகா இலக்கு கொண்டுள்ளது.

இதை தவிர்த்து மஇகா புதிய தலைமையகத்தின் கட்டுமான பணிகள் குறித்து பேசி இறுதி செய்யப்பட்டது.

விரைவில் கட்டடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles