
சுங்கைபட்டாணி அக் 23-இந்திய சமுதாயம் எதிர்காலத்தில் கல்வி பொருளாதாரம் மற்றும் சமூக நிலையில் சிறப்பாக திகழ்வதற்கு மஇகாவின் தேசியத் தலைவர் தான்ஶ்ரீ எஸ்ஏ.விக்னேஸ்வரன் எடுக்கும் முடிவிற்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும் என மஇகாவின் தேசிய பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் எஸ்.ஆனந்தன் கேட்டுக் கொண்டார்.
தான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் நமது இந்திய சமுதாயம் எதிர்காலத்தில் சிறப்பான சமுதாயமாக உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகாமாக உள்ளது.

எதிர்காலத்தில் நமது இந்திய சமுதாயம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலையில் சிறப்பான நிலையை அடைந்தாக வேண்டும்.
அதன் காரணமாக டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கட்சி ரீதியில் சமுதாய நலன் கருதி எடுக்கும் அந்த முடிவிற்கு மக்கள் தங்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என்றார்.
இங்குள்ள பார்லி மண்டபத்தில் மஇகா சுங்கைபட்டாணி தொகுதி சீடம்,கம்போங் குளுகோர் கிராமத்து தலைவர் கள் தீபாவளி விருந்து நிகழ்வில் டத்தோ ஆனந்தன் கலந்துக் கொண்டார். சுங்கைபட்டாணி மஇகா தொகுதியின் தலைவர் எஸ்.தில்லை அத்தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் தீபாவளி அன்பளிப்பையும் வழங்கினார்.

