ராஜா காளிமுத்து இல்ல தீபாவளி உபசரிப்பில் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி!

கோலாலம்பூர் அக் 22-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தித்தி வங்சா தொகுதி பிரித்தீவி கொண்டோ மினியம் ம இகா கிளைத் தலைவர் ராஜா காளிமுத்து இல்லத்தில் நடைபெற்ற உபசரிப்பில் தோட்டத் தொழில் துறை மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

ராஜா காளிமுத்து இல்லத்திற்கு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி வருகை புரிந்த போது அவருக்கு மேளம் தாள வரவேற்பு நல்கப்பட்டது.

ராஜா காளிமுத்து இல்லத்தில் பரிமாறப்பட்ட சுவையான உணவு வகைகளை ரூசித்து சாப்பிட்டார்.

அவருக்கு ராஜா காளிமுத்து – ஜூலியானா தம்பதியர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

இந்த நிகழ்வில் ராஜா காளிமுத்துவின் புதல்வர்கள் டில்லன் ராஜா, கார்த்திக் ராஜா, புதல்வி சோபானா, சகோதரர் நடராஜா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles