பாங்கி தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பயன் படுத்தி வரும் திடலை எடுத்து கொள்ள வேண்டாம். டத்தோ டி.மோகன் வேண்டுகோள்!

காளிதாஸ் சுப்ரமணியம்

பாங்கி, அக் 31-
பாங்கி தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பயன் படுத்தி வரும் திடலை மேம்பாட்டு நிறுவனம் எடுத்து கொள்ள கூடாது.

பாங்கி தமிழ்ப் பள்ளி மாணவர்கள் காலங் காலமாக இந்த திடலை பயன் படுத்தி வருகின்றனர் .

மாணவர்களின் நலன் கருதி மற்றும் பாங்கி லாமா மக்கள் தொடர்ந்து பயன் படுத்தி கொள்ளும் வகையில் இந்த திடல் நிலைத்து இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பாங்கி தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பயன் படுத்தி வரும் திடலை மேம்பாட்டு நிறுவனம் எடுத்து கொள்ளலாம் என்ற அச்சம் இப்போது பாங்கி வட்டார மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திடலை எடுத்து கொண்டால்
பாங்கி தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு திடல் இல்லாமல் போகலாம்.

ஆகவே பாங்கி தமிழ்ப் பள்ளி மாணவர்களின் மேம்பாட்டு நலன் கருதி இந்த திடல் நிலைத்து இருக்க நாம் போராடுவோம் என்று அவர் கேட்டுக் கொண்டார் .

இன்று காலையில் பாங்கி தமிழ்ப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாங்கி இந்தியர்கள் ஒன்று திரண்டு இந்த திடலை காக்க களத்தில் இறங்கினர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டத்தோ டி மோகன், ம இகா மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ குணாளன் மற்றும் பாங்கி கெஅடிலான் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மதிவேந்தர், மகேந்திரன், பாங்கி பன்னீர் செல்வம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுகுமாரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles