ஜொகூர் மாநிலத்தில்
ஐந்து தொகுதிகளில்
மீரா கட்சி பொறுப்பாளர்கள் நியமனம்

மலேசியா இந்தியர் சிறுபான்மை கட்சி என்றழைக்கப்படும் மீரா சார்பில் ஜொகூர் மாநிலத்தில் ஐந்து தொகுதிகளில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடு தழுவிய அளவில் மீரா கட்சி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள் என்று மீரா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஆர் சந்திரகுமணன் தெரிவித்தார்.

இதனிடையே மீரா கட்சியின் முதல் மத்திய செயற்குழு கூட்டம் இன்று டத்தோ ஆர் சந்திரகுமணன் தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் செயலாளர் கண்ணன் இராமசாமி உட்பட அனைத்து உச்சமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக டத்தோ ஆர் சந்திரகுமணன் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles