
மலேசியா திருநாட்டில் பிரபலமான வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் இன்று காலமானார்
இவரின் மரண செய்தி நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
79 வயதான டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் கோலாலம்பூர் கெலனிக்கெல் மருத்துவமனையில் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பீல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான இவர் பல முக்கிய வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர்.
குறிப்பாக சரவாக் மாநில பள்ளிகளுக்கு ஓரிய ஒளிக் கதிர்கள் பொருத்தும் திட்டத்தில் ஊழல் புரிந்ததாக ரோஸ்மா மன்சோர் மீது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டபோது அரசு தரப்புக்கு தலைமை ஏற்று வாதாடியவர் கோபால் ஸ்ரீராம் ஆவார்.
இந்த ஊழல் வழக்கில் ரோஸ்மா மன்சோர் ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 10 ஆண்டு சிறை மற்றும் 97 கோடி வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ரோஸ்மா மன்சோர் மேல் முறையீடு செய்துள்ளார்.

