
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு மாநிலத்தில் பிப்ரவரி 4 ஆம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு தங்கரதம் பவனி வரும் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அறிவித்துள்ளது.
பினாங்கு மாநில துணை முதல்வர் மற்றும் பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தலைமையில் இவ்வாண்டு பினாங்கு தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
பிப்ரவரி 4 ஆம் அதிகாலை 5.00 மணிக்கு புறப்படும் தங்கரதம் பினாங்கு மாநிலத்தை வலம் வந்து பின்னர் பினாங்கு தண்ணீர் மலை பால தண்டாயுதபாணி ஆலயத்தை வந்தடையும்.
இவ்வாண்டு பினாங்கு தைப்பூசத் தில் லட்சணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

