
ஒரு அமைச்சர் அளிக்கும் ஒவ்வொரு பதிலும் விவேகத்துடனும், திறந்த கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்க பேச்சாளரும் தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தினார்.
தகவல் துல்லியமாக தெரிவிக்கப்படுவதையும், குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
அரசாங்கத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையிலான தொடர்பு பரஸ்பர மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமை ஒரு நிகழ்வில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியதாக வீட்டு வசதி, ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங்கின் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது.
பத்திரிகையாளர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் கேள்விகளைக் கேட்க உரிமை உண்டு என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக நான் அமைச்சரைத் தொடர்பு கொண்டேன்.
அவர் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார் என்று அவர் தகவல் தொடர்பு அமைச்சில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

