
தமிழர்களின் உன்னதமான பெருநாள் என்று வர்ணிக்கப்படும் தைப்பொங்கல் விழா கெர்லிங் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
உலு சிலாங்கூர் கவுன்சிலர் திருமதி திலகாவதி ஏற்பாட்டில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவுக்கு கெர்லிங் தமிழ்ப்பள்ளி சூரியன் குருகுலம், மை கிந்தா இயக்கம் முழு ஆதரவை வழங்கின.
உலு சிலாங்கூர் கவுன்சிலர் சின்னையா, கெர்லிங் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் குமார், முன்னாள் கவுன்சிலர் கனகராஜா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மத்தியில் சூரியன் குருகுலத்தை சேர்ந்த மாணவர்களின் படைப்புகளும் இடம் பெற்றன.

