
கோலாலம்பூர் நவ 4-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிபிபி கட்சியின் பொது உபசரிப்பு வரும் நவம்பர் 8 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
கோலாலம்பூர் கம்போங் அத்தாப் பிபிபி கட்சியின் தலைமையகத்தில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை இந்த பொது உபசரிப்பு நடைபெறுகிறது.
பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பொதுமக்கள் பாரம்பரிய உடைகளில் வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

