ஜப்பார் பாய் பிரியாணி உணவகத்தின் புதிய கிளை பிரிக்பீல்ட்ஸில் திறப்பு விழா கண்டது! டத்தோஸ்ரீ எம்.சரவணன் – பி.பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்!

கோலாலம்பூர்,நவ.15-
பிரியாணி விற்பனையில் புகழ்பெற்ற உணவகமான ஜப்பார் பாய் பிரியாணி உணவகத்தின் புதிய கிளை பிரிக்பீல்ட்ஸில் திறக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த உணவகத்தை அதிகாரப்பூர்வமாக மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் தற்போது அதிகமான இளைஞர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதியதாக பல வியாபாரங்களை அவர்கள் தொடங்கி வருகின்றனர்.

ஆகையால் வியாபாரத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் வியாபாரத்தை தொடரலாம் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

மேலும் கட்டங்களை வாங்க நினைப்பவர்கள் இந்த பகுதியில் விலை அதிகமாக இருந்தாலும் கூட இங்கு கட்டங்களை வாங்கி வாடகைக்கு விட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பார்க்கலாம் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

மேலும் உலகளவில் பிரபலமான இந்த ஜப்பார் பாய் உணவகம் துபாய், அமெரிக்கா, கனடா மலேசியா ஆகிய நாடுகளில் கிளை உணவகஙகள் உள்ளது.

மலேசியாவில் இன்று பிரிக்பீல்ட்ஸ்-இல் 2வது கிளை உணவாக திறப்பு விழா கண்டிருக்கிறது. உலகளவில் இது 8 வது கிளை உணவகம் என்று ஜப்பார் பாய் உணவகத்தின் உரிமையாளர் ஜப்பார் பாய் தெரிவித்தார். மலேசியாவின் முதல் கிளை உணவகம் ஜொகூர் மாநிலத்தில் திறப்பட்டட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திறப்பு விழாவில் காரம் சாரம் உணவக உரிமையாளர் ஸ்ரீதரன், ஓ யே உணவக உரிமையாளர் பாபு, செலாயாங் கெப்பிட்டல் ஹால் உரிமையாளர் டத்தோஸ்ரீ ஹரி ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles