சொக்சோ ஊடக விருதளிப்பு விழாவில் மக்கள் ஓசை ராமேஸ்வரி விருது பெற்றார்!

கோலாலம்பூர் நவ 18-
சொக்சோ எனப்படும் Perkeso
விருதளிப்பு விழா
கடந்த வியாழக்கிழமை இரவு மண்டரின் ஓரியண்டல் விடுதியில் நடைபெற்றது.

இந்த விருது விழாவில் ‘Anugerah Penghargaan Khas Aspirasi Media PERKESO 2025 – i LINDUNG u’ எனும் விருதை ஒரே தமிழ் ஊடகமாக மக்கள் ஓசை பெற்றது.

பெர்கேசோவின் ‘i Lindung u’ குறித்து செய்தி ஆசிரியர் ராமேஸ்வரி ராஜா எழுதியிருந்தார். அதனை அங்கீகரிக்கும் பொருட்டு இந்த விருதை அமைச்சர் ஸ்டிவன் சிம் எடுத்து வழங்கி கௌரவித்தார்.

ஆண்டு தோறும் அதிகரித்து வரும் படைப்பு சமர்ப்பிப்புகளில் இந்த ஆண்டும் மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முன்மொழிவுகள் இடம்பெற்றன.

அவற்றில் ஏழு பிரிவுகளில் ஊடகத்தினர் விருதுகளைப் பெற்றனர். அதில் சிறப்பு விருது எனும் பிரிவில் மக்கள் ஓசை இந்த விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles