
ஷா ஆலம், நவ 18-
கடந்த நவம்பர் 14 ஆம் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி சமர்ப்பித்த 2026 பட்ஜெட் மிகச் சிறந்த, மிகவும் திட்டமிட்ட மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பட்ஜெட் ஆகும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தெரிவித்தார்.
- மக்கள் நலப் பட்ஜெட்
- மேம்பாட்டு பட்ஜெட்
- எதிர்காலத்தை உருவாக்கும் பட்ஜெட் என்று நான் வலியுறுத்துகிறேன்.
மேலும், பல மாநிலங்களில் எதிர்க்கட்சியின் ஆட்சி காலத்தில் அவர்கள் முன்வைத்த எந்தப் பட்ஜெட்டையும் விட இது பல மடங்கு மேம்பட்டது.
1) மாநில வருவாய் & மக்கள் பொருளாதார வாய்ப்புகள் ஆகியவை சிலாங்கூர் இன்று மலேசியாவின் பொருளாதார இதயம்.
- தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 25.5%
- மலேசிய உற்பத்தித் துறையில் 33%
- 2023–2024 இராண்டுகளில் RM40 பில்லியன் முதலீடு
- 1.9 மில்லியனுக்கும் மேற்பட்ட பணியாளர்கள்
இந்த சாதனைகள் தானாக வந்தவை அல்ல;
இவை நிலைத்த அரசியல், பொறுப்புள்ள தலைமையே உருவாக்கியவை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இதுவே இன்றைய அரசையும் எதிர்க்கட்சியையும் பிரித்துக் காட்டுகிறது.
இன்றைய அரசின்:
- சாதனைப் பதிவுகள் உள்ளன
- முடிவுகள் உள்ளன
- செயல்பாடு உள்ளது
ஆனால் எதிர்க்கட்சிக்கு:
- மாற்றுப் பட்ஜெட் இல்லை
- பொருளாதாரத் திட்டம் இல்லை
- தொழில்நுட்பக் கொள்கை இல்லை
- வெள்ளத்திற்கான திட்டம் இல்லை
- எதிர்காலக் கல்விக்கான பார்வை இல்லை
அவர்கள் வைத்திருப்பது—ஒரு மைக்ரோஃபோன் மற்றும் தொடர்ச்சியான பேச்சு மட்டும் என்று அவர் சாடினார்.
சிலாங்கூர் 2026 – முன்னேற்றத்தின் புதிய நிலை,
மாநில வருவாயை நவீனப்படுத்தி, டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னேற்றும் அரசு அணுகுமுறையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
(i) சிலாங்கூர் AI & டிஜிட்டல் பொருளாதார நிதி, உலகம் தானியக்கத்தையும் AI-யையும் நோக்கி நகர்கிறது.
கொரியா, சிங்கப்பூர், UAE—அனைத்தும் வளர்ச்சியின் நெறியாக AI-யை தேர்ந்தெடுத்துள்ளன.
IC Design Park போன்ற முயற்சிகள் சிலாங்கூரை சர்வதேச மேடையில் நிறுத்தும்.
- AI மேம்பாட்டு நிதி
- தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் ஆதரவு
- SME தானியக்க உதவி
- டிஜிட்டல் பயிற்சி & மூலதனம்
இவை விருப்பங்கள் அல்ல—அவை காலத்தின் கட்டாயங்கள்.
(ii) “ரக்கியாட் நியாகா சிலாங்கூர்” தளம்
சிறு வர்த்தகர்களை முன்னேற்றும் ஒரு மாநில தளம்:
- பாதுகாப்பான QR கட்டண அமைப்பு
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி
- பிராண்டிங் & விளம்பரம்
- குறைந்த வட்டி மைக்ரோ கடன் –
இது பசார் மலாம் மற்றும் பசார் தானி வியாபாரிகளுக்கு Foodpanda / GrabFood போன்ற செயலிகளில் விற்பனை செய்ய புதிய கதவுகளைத் திறக்கும்.
(iii) I-SEED+ (இந்திய சமூகமும் B40 குடும்பங்களும்)
இந்திய சமூகத்திற்கான RM500,000 ஒதுக்கீட்டை நான் வரவேற்கிறேன்.
ஆனால் அவர்கள் “உதவி” மட்டுமே வேண்டுபவர்கள் அல்ல—
வாய்ப்புகளே அதிகம் தேவைப்படுகின்றன.
I-SEED விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
- வியாபார தொடக்க மூலதனம்
- இன்கியூபேட்டர் திட்டங்கள்
- டிஜிட்டல் பயிற்சி
- நிபுணர் வழிகாட்டுதல்
வருங்கால 10 ஆண்டுகளுக்குப் poverty chain முறியடிக்க,
I-SEED-ஐ RM10 juta அளவிற்கு உயர்த்துவது மிகத் தேவையானது.
2) நல்லாட்சி சீர்திருத்தம் & சமூக மரியாதை உயர்த்தல் போன்றவை
அது முதலீட்டாளர் நம்பிக்கை, பொருளாதார ஸ்திரதன்மை மற்றும் மக்கள் நம்பிக்கை ஆகியவற்றின் அடித்தளம்.
வெளிப்படையான டிஜிட்டல் அமைப்பு
- வலுவான GLC உள்துறை தணிக்கை
- தொடர்ச்சியான கொள்கை நிறைவேற்றம்
ஆனால் நாம் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்.
மேலும்
- B40 உதவிகள்
- முதியோர் நல திட்டங்கள்
(i) சமூக ஆலோசனை & எதிர்ப்பு-வன்முறை திட்டம்
- ஆலோசனை
- பள்ளி & ஆன்லைன் துன்புறுத்தல் தடுப்பு
- சைபர் பலியடைப்பைத் தடுக்கும் பயிற்சிகள்
(ii) சமூக பாதுகாப்பு
- CCTV
- LED விளக்குகள்
- சமூக ரோந்துப் பணிகள்
(iii) ஒற்றைத் தாய்மார் & மாற்றுத் திறனாளிகள்
- டிஜிட்டல் வேலை வாய்ப்புகள்
- நெகிழ்வான பயிற்சி
- கூடுதல் வருமான வாய்ப்புகள்
(iv) மாடுப் பண்ணை & ஆடு பண்ணை பிரச்சினை
பல கால்நடை வளர்ப்போருக்கு நிலம் இல்லை போன்ற விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

