ஜொகூர் மாநில பெர்சத்து பெர்செகுத்து தலைவர் டத்தோ தான் லொ காங் தலைமையில் பிரச்சாரம்!!

கோத்தா கினபாலு நவ 23-
மேற்கு மலேசியாவின் இயற்கை வளம் நிறைந்த சபா மாநிலத்தின் 17 வது மாநில தேர்தலை எதிர்வரும் 29 தேதி நடைபெறவிருக்கின்றது.

24 அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து சுயேட்சை வேட்பாளர்களுடன், மொத்தம் 596 போட்டியிடுகின்ற சபா சட்டமன்ற தேர்தலில் நடக்கவிருக்கிறது.

16 தேர்தல்கள் முடிந்த நிலையில் பல முதல்வர்களை சந்தித்த நிலையில் சபாவின் முன்னேற்றம் கேள்விக்குறியாக இருக்கிறது.

இன்றைய சுழ்நிலையில் சபா மலேசியாவிலேயே எழ்மையான மாநிலமாக விளங்குகிறது.

1970களில் அபாரமான இயற்கை வளங்களைக் கொண்டிருந்த நாடு, 2025ஆம் ஆண்டில் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இது முற்றிலும் பொருளாதாரத்திற்கு முரணானது; எந்த நியாயமான புரிதலுக்கும் அப்பாற்பட்டதாக உள்ளது.

வாக்காளர்கள் வழங்கிய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தலைவர்கள் முற்றிலும் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டுள்ளனர்.

சபாவிற்கு உண்மையாக வழிநடத்தக்கூடிய தலைவர் தேவை தனிப்பட்ட செல்வத்திலும் பதவிகளிலும் ஆர்வம் கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டுமே தோன்றும் ஒருவரல்ல. பயனுள்ள, நல்வழி ஆட்சியின் முதன்மை அம்சமான அரசியல் பொறுப்புணர்வு இன்று வெறும் காலியான வாக்குறுதிகளாக குறைந்து விட்டது;

அதன் விளைவுகளைச் சபா மக்கள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே சபா மாநிலத்தில் பேட்டியிடும் பெரிக்கத்தான் பெருமன்மையுடன் வெற்றிபெற வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles