
சிறு வயது முதலே அரசியல் போராட்டத்தில் பங்கேற்றவர் நூருல் இஸா அன்வார்.
மக்களுக்காக போராடும் குணம் படைத்த இவரின் நியமனத்தை கேள்வி எழுப்ப தேவையில்லை என்று கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
நூருல் இஸா யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். நானும் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.
அவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி.
நிதியமைச்சின் மூத்த ஆலோசகராக தனது மகள் நூருல் இஸாவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமனம் செய்திருப்பதை பெரிதும் வரவேற்கிறேன்.
இவர் இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். ஆகவே கேள்வியை எழுப்ப தேவையில்லை என்றார் அவர்.

