திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க
நாடு தழுவிய அளவில்
தொழில் பயிற்சிகள்!
அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

Tvet எனப்படும் தொழில் பயிற்சிகள் மூலம் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க மனித வள அமைச்சு இலக்கு வைத்திருக்கிறது என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

திறன் வாய்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அதிகம் தேவைப்படுகிறார்கள்.

மனித வள அமைச்சின் tvet திட்டத்தின் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

தொழில் திறன் மூலம் தேர்ச்சி பெறும் இளைஞர்களின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்று அவர் சொன்னார்

இதனிடையே மலாக்கா மாநிலத்தில் பெர்கேசோ பயிற்சி வாழ்வு மையத்திற்கு நேற்று சிறப்பு வருகை புரிந்த மனித வள அமைச்சர் சிவகுமார் மற்றும் துணை அமைச்சர் முஸ்தாபுவுக்கு அங்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து முழு விளக்கம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles