

தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு
பால தண்டாயுதபாணி கோவில் ஜாலான் உத்தாமாவில் LINERZ Motorsports ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
LINERZ Motorsports தலைவர் விஜய மாணிக்கம் என்ற விஜேய் தலைமையில் பிப்ரவரி 4 ஆம் தேதியும் மறுநாள் தைப்பூசத் தினத்திலும் ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு பானங்களும் உணவுகளும் வழங்கப்படும்.
தண்ணீர் பந்தலுக்கு சிறப்பு வருகை புரியும் பினாங்கு மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி உட்பட முக்கிய பிரமுகர்களுக்கும் சிறப்பு செய்யப்படவுள்ளது.
இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தைப்பூசம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுவதால் இம்முறை பினாங்கு தைப்பூசம் ஜெகஜோதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

