
காரைக்குடி, நவ 28-
வலது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு தமிழ் நாடு காரைக்குடி அருணா நகரில் உள்ள பிகேஎன் மருத்துவமனையில் நிருபர் முருகன் அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அறுவைச் சிகிச்சையை டாக்டர் மோகன் குமார் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
தமது அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டி தந்து உதவிய மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் உட்பட நல்லுள்ளங்களுக்கு நிருபர் முருகன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தற்போது நலம் பெற்று வருவதாக அவர் சொன்னார்.

