
பந்திங், ஏப் 21-
பந்திங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 200 குடியிருப்பாளர்கள் ‘பிரிஹாத்தின் கம்போங் பாரு’ திட்டத்தின் மூலம் அரிசி மற்றும் சமையலறைப் பொருட்களை உதவியாகப் பெற்றனர்.
இந்தச் சமூகத் திட்டம், உள்ளூர் மக்களிடையே மறுசுழற்சி முயற்சியை ஊக்குவிப்பதன் மூலம் நீடித்த நிலைத்தன்மை கூறுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தது.
தேவை உள்ளவரின் சுமையைக் குறைப்பதே இந்த உதவியின் நோக்கம் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு கூறினார்.
“வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும் வகையில் 200 பேர் அரிசி மற்றும் சமையல் பொருட்களைப் பெற்றனர்,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
ஜெஞ்சாரோம் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழு (JPKK) மற்றும் துங் லோ சுங்கை ஜாரோம் ஆலய சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

