
கோலாலம்பூர் ஏப் 21-
நீண்டகாலமாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்திருப்பதோடு, எஸ்பிஎம், பிடி3, யூபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி நூல்களை கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கி வெளியிட்டு வரும் திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம் எழுதிய சிறுகதைகள் – கட்டுரைகள் – கவிதைகள் அடங்கிய ‘கதம்பம்’ தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
எதிர்வரும் வியாழக்கிழமை 23 ஏப்ரல் 2026-ஆம் நாள் மாலை 5.30 மணி தொடங்கி தேநீர் விருந்துபசரிப்புடன் இந்த நூல் வெளியீட்டு விழா, பிரிக்பீல்ட்ஸ் மலேசிய கண்பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் (Jalan Tebing, Off Jalan Tun Sambanthan 4, Brickfields, 50470 Kuala Lumpur) நடைபெறுகிறது.
புத்ரா பல்கலைக் கழக விரிவுரையாளரும் எழுத்தாளருமான முனைவர் ராஜேஷ் இராமசாமி நிகழ்ச்சி நெறியாளராக வழிநடத்தும் இந்த நிகழ்ச்சியில் மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும் இணைப் பேராசிரியரும் மலேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் தலைவருமான முனைவர் முல்லை இராமையா அவர்களின் நூலாசிரியர் குறித்த அறிமுகமும், எழுத்தாளரும் கல்வியியலாளருமான கோபாலன் @ தமிழரசு அவர்களின் நூல் அறிமுக உரையும் இடம் பெறும்.
நூலாசிரியர் விக்னேஸ்வரியின் குடும்ப உறுப்பினர்கள் சார்பாக அவரின் புதல்வரும் திரைப்பட, தொலைக்காட்சித் தொடர்களின் இயக்குநரும், திரைக்கதாசிரியருமான தீபன் எம்.விக்னேஷ் நன்றியுரை நிகழ்த்துவார்.
டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையுரையாற்றி, நூலை வெளியிட்டு சிறப்புச் செய்வார்.
முதல் நூலை மஇகா பெட்டாலிங் ஜெயா தொகுதி காங்கிரஸ் தலைவரும், மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ எஸ்.எம்.முத்து பெற்றுக் கொள்வார்.
தமிழ் இலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்களும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி ஏற்பாட்டாளர்கள் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.
தொடர்புக்கு: 012-3922497, 011-27106045
2

