
கோலாலம்பூர் டிச 5-
இளம் பட்டதாரி டாக்டர் மோகேஷ் சபாபதி மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நோய் எதிர்ப்பு உயிரியல் விஞ்ஞானி ஆவார்.
ஷா ஆலமை சேர்ந்த இவர் மலேசிய திரெங்கானு பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
மேலும் புத்ரா பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பு உயிரியல் விஞ்ஞானி துறையில் டாக்டர் பட்டமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவரின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் சிறப்பு செய்யப்பட்டது.
இன்று மாலையில் பிபிபி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
மலேசிய இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த துறையில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது பெருமை அளிக்கிறது என்று டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
இவர் பெர்னாமா மலாய் செய்தியை வாசிப்பதில் மிகவும் கெட்டிக்காரர்.
இவரை போன்ற இளைஞர்கள் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும்
மிகவும் தேவை.
பிபிபி கட்சி எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
கல்வி மட்டுமே ஒரு சிறப்பான எதிர்காலத்தை வழங்கும் என்பதால் நமது சமுதாயம் கல்விக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பிபிபி கட்சியின் தலைமை செயலாளர் டத்தோ இண்டர்ஜிட், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, தகவல் தொடர்பு துறை தலைவர் ஸ்டீபன், துணை தலைவர் குமார் மற்றும் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதனிடையே தமக்கு சிறப்பு செய்த பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மற்றும் பிபிபி கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டாக்டர் மோகேஷ் சபாபதி தெரிவித்தார்.

