
பேங்காக் டிச 14-
தாய்லாந்து சீ விளையாட்டு போட்டியில் சிங்கப்பூரின் தங்க மகள் சாந்தி பெரேரா பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
சாந்தி பெரேரா, 23.05 வினாடியில் பந்தயத்தை முடித்தார்.
வியட்னாமின் லே தி கேம் து இரண்டாவது இடத்தில் வந்தார் (23.14). மூன்றாவது நிலையில் பிலிப்பீன்சின் ஜியோன் நெல்சன் (23.50) வந்தார்.
29 வயதான சாந்தி பெரேரா, தொடர்ந்து இரண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100, 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
டிசம்பர் 11ஆம் தேதி சாந்தி பெரேரா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றார். 11.37 வினாடியில் அவர் பந்தயத்தை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
thanks – The Straits Times SPH

