
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் டிச 29-
140 அடி உயரம் கொண்ட பத்துமலை திருமுருகன் சிலைக்கு வர்ணம் பூசப்பட்டு கம்பீரமாக காட்சி அளிக்கும் வேளையில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி மாபெரும் வகையில் மாபெரும் பெருவிழா நடைபெறுகிறது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் இந்த விழா காலை முதல் இரவு வரை நடைபெறும் என்று தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.
பத்துமலை திருத்தலத்தில் தமிழ் கடவுள் திருமுருகன் சிலை நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன.
தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார் தலைமையில்
கடந்த இரண்டு மாதங்களாக முருகன் சிலை சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது
உலக மக்களின் மனம் கவர்ந்த திருத்தலமாக பத்துமலை விளங்குகிறது.
அந்த வகையில் ஜனவரி 1 ஆம் தேதி நடைபெறும் விழாவில் சமய இன்னிசை கச்சேரியும் இடம் பெறும் என்று அவர் சொன்னார்.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கலைஞர்கள் மற்றும் உள்ளுர் கலைஞர்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்களை பாடி பொதுமக்களை பரவசத்தில் ஆழ்த்துவார்கள்.
காலை 7 மணிக்கு மேல் ஹோமம் வளர்க்கப்பட்டு விழா அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.
ஜனவரி 1 ஆம் தேதி இரவு வாண வேடிக்கை இடம் பெறும் என்று இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

