ஜனவரி 17 ஆம் தேதி பத்துமலை திருத்தலத்தில் தைப்பொங்கல் விழா! டான்ஸ்ரீ நடராஜா அறிவிப்பு

கோலாலம்பூர் டிச 19-.
தித்திக்கும் தைப்பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 17 ஆம் தேதி பத்துமலை திருத்தலத்தில் மிகப்பெரிய அளவில் தைப்பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலை முன்னிட்டு தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் பத்துமலை திருத்தலத்தில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அடுத்த ஆண்டும் ஜனவரி 17 ஆம் தேதி தைப்பொங்கல் விழா பாரம்பரிய முறையில் நடத்தப்படும்.

தமிழகத்தைச் சேர்ந்த அரங்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகன் ராட்சகன் இந்த விழாவில் கலந்து கொள்கிறார் என்று அவர் சொன்னார்.

இதனிடையே அண்மையில் பத்துமலை திருத்தலத்தில் ஏற்பட்ட வெள்ளம் பற்றி அதிக அளவில் பதவியேற்றம் செய்தார்கள்.

வெள்ளம் ஏறும். அது சில மணி நேரத்தில் வடிந்து விடும். இது இயற்கை. ஆனால் இதை பெரிய அளவில் வைரலாக்கினார்கள் என்று அவர் சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles