ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய ஜசெக இளைஞர் – மகளிர் அணியினர்!

பத்துமலை,பிப் 3-
தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு தைப்பூசம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் பத்துமலை திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் தாகம் தீர்க்க குளிர்பானங்கள் மற்றும் சுவையான உணவுகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் ஜசெக இளைஞர் மற்றும் மகளிர் அணி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மோர், குளிர்பானங்கள் மற்றும் சுவையான உணவுகளை வழங்கி உபசரித்தனர்.

பக்தி மற்றும் தர்மத்தின் அடையாளமாக அன்னதானம் (உணவளிப்பு) நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அன்னதான நிகழ்ச்சி DAPSY சிலாங்கூர், DAPSY நெகிரி செம்பிலான் மற்றும் DAP மகளிர் சிலாங்கூர் இணைந்து, ஆதரவாளர் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் YB அருண்குமார் அவர்களின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

DAP தலைவர் YB கோபிந்த் சிங் டியோ அவர்களுடன் YB அருண்குமார், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் YB ஓங் சூ வேய், DAPSY சிலாங்கூர் தலைவர் லீ வீ பின், DAPSY நெகிரி செம்பிலான் தலைவர் லிம் சுங் வெங், DAP மகளிர் சிலாங்கூர் பிரதிநிதி மற்றும் பிற கவுன்சிலர்கள் ஆகியோரும்
அன்னதான ஏற்பாட்டில் நேரில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த அன்னதானம் வெற்றிகரமாக நடைபெற காரணமான ஆதரவாளர், உதவியாளர்கள் மற்றும் உணவளிப்பு குழுவினருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் என்று ஷா ஆலம் கவுன்சிலர் திருமதி யோகேஸ்வரி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles