மித்ரா மூலம் நெகிரியில் 45 தமிழ்ப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு அன்பளிப்பு!

சிரம்பான், பிப் 3-
மித்ரா மூலம் இன்று நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 45 தமிழ்ப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு எனப்படும் திறன் பலகைகள் வழங்கப்பட்டது.

45 தமிழ்ப் பள்ளிகளுக்கு திறன் பலகை வழங்கும் நிகழ்ச்சிக்கு துணை கல்வி அமைச்சர்
மாண்புமிகு வோங் கா வோ தலைமை தாங்கினார்.

பண்டார் ஸ்ரீ செண்டாயன், தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ.அருள்குமார் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பி.குணசேகரன் உட்பட மித்ரா அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

இதனிடையே பண்டார் ஸ்ரீ செண்டாயன் தமிழ்ப் பள்ளியில் 12 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை துணை அமைச்சர் பார்வையிட்டார்.

இந்தப் பள்ளியில் தற்போது 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர், 2 பள்ளி அமர்வுகள் உள்ளன.

இங்கு புதிய வீடமைப்பு காரணமாக அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த கூடுதல் கட்டிடம் மிகவும் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles