கரபாவ் கிண்ணம்: செல்சியை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு அர்செனல் தேர்வு

லண்டன்: பிப் 4-
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு அர்செனல் கிளப் தகுதி பெற்றது.

இன்று அதிகாலை நேரத்தில் எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அர்செனல் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சியை வீழ்த்தியது.

அர்செனல் கிளப்பின் வெற்றி கோலை ஆட்டத்தின் 97ஆவது நிமிடத்தில் காய் ஹாவர்டஸ் அடித்தார்.

இரு ஆட்டங்களின் முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்செனல் கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles