பல ஆயிரம் பக்தர்கள் புடை சூழ வள்ளி தெய்வானையுடன் வெள்ளி இரதத்தில் சுங்கைபட்டாணி நகரை வலம் வந்தார் முருகப்பெருமான்.

சுங்கைபட்டாணி, பிப் 5- பல ஆயிரம் பக்தர்கள் புடை சூழ வள்ளி தெய்வானையுடன் வெள்ளி இரதத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு முருகப் பெருமான் தரிசனம் தந்தார்.


மால 7மணிக்கு மேல் தேவஸ்தானத்தை விட்டு வெள்ளி இரதம் புறப்படுவதற்கு முன்பாக தேவஸ்தானத்திற்கு உதவிய நன்கொடைகொடையாளர்கள், தேவஸ்தான அறங்காவலர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு தேவஸ்தானம் தனது நன்றியினைத் தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு செய்ததார் தேவஸ்தானத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன்.


ஒருமைபாட்டு துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ்,மஇகாவின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் எஸ்.ஆனந்தன்,ம இகா கெடா மாநிலத் தலைவர் எஸ்.சுரேஸ ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக இதில் கலந்துக் கொண்டனர்.


வழி நெடுகிலும் உள்ள பந்தல்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக பக்தர்களின் பசியினை போக்குவதற்கும் தாகத்தை தீர்ப்பதற்கும் இடைவிடாது உணவுகளை தந்துக் கொண்டிருந்தனர்.


மிகப்,பெரிய செலவில் வடிவமைக்கப்பட்ட “டோப் ப்ளாவர் தண்ணீர் பந்தல்” வந்திருந்தோர் அனைவரையும் கவர்ந்திருந்தது.புதுமை வடிவில் அமைக்கப்பட்ட அப்பந்தல் முன்னாள் கூட்டம் வழிந்தோடியது. சேவையினை வழங்வதில் என்றும் தயங்காத முத்தையாஸ் கேஸ் என் கேரி நிறுவனம் இரத ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட பக்தர்கர்களுக்கு பல சலிக்காமல் உணவுகளை வழங்கிக் கொண்டிருந்தது.


பக்தர்களுக்கு தரிசனம் தந்தப் பின் மறுநாள் காலை மணி 7..30க்கு தனது தேவஸ்தானத்திற்கு வந்தடைந்தார் சுங்கைபட்டாணி முருகப் பெருமான்.

இந்த ஆண்டு சுங்கைபட்டாணி தைப்பூசத்தில் பல வித வண்ணக்காவடிகள் வந்திருந்தாலும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பிரிவின் இயக்குனராக பணியாற்றும் ரவிகுமார் ஏந்தி வந்த காவடி பலரை கவர்ந்தது.குறிப்பாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இராஜேந்திரன் அவரோடு அவரது குழுவினர் பக்திப்பாடல்களை பாடிக்கொண்டே வந்ததும் பலருக்கு நல்ல வழிகாட்டுதலாக அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles