
கோலாலம்பூர், பிப் 4-
ம.இ.கா. தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களுக்கு, ம.இ.கா தித்திவங்சா தொகுதி துணைத் தலைவர் டத்தோ பி.ஆறுமுகம் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இன்று டத்தோஸ்ரீ சரவணன் அவர்களின் இல்லத்தில் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட டத்தோ ஆறுமுகம் டத்தோஸ்ரீ சரவணனுக்கு மாலை அணிவித்து, தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இந்த விழாவில் ம.இ.கா. கட்சி தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் உட்பட தலைவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

