
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் பிப் 5-
ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் நேற்று தமது இல்லத்தில் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
ம இகா தலைவர்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

டத்தோ புத்ரி சிவம், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினர்கள், லேபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் தலைவர் வேலாண்டி, செயலாளர் ராஜன் மற்றும் மலேசிய நகரத்தார் சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன், உமாராணி குழுமத்தின் இயக்குநர் டத்தோ ஏ.கே.ராமா ஆகியோரும் டத்தோஸ்ரீ சரவணனுக்கு மாலை அணிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

