இங்கிலாந்து அணியை காப்பாற்றிய ஹேரி கேன்

வாஷிங்டன் ஜூலை 2-

காங்கோ குடியரசுக்கு எதிரான உலகக் கிண்ண ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

2 – 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் நிறைவடைந்தது.

அட்லாண்ட்டா விளையாட்டரங்கில் போட்டி நடந்தது.

ஆட்டத்தின் முதல் பாதியில் காங்கோ அணியின் பிரையன் சிபெங்கா (Brian Cipenga) கோல் போட்டார்.

நீண்ட நேரத்திற்குக் காங்கோ முன்னிலையைத் தக்க வைத்திருந்தது.

கடைசி 15 நிமிடத்தில் ஹாரி கேன் (Harry Kane) ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினார்.

75ஆம் நிமிடத்தில் அவர் புகுத்திய கோல் சமநிலையை ஏற்படுத்தியது.

பின்னர் 86 ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டு தம் அணியினரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றார் ஹேரிகேன்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (5 ஜூலை) இங்கிலாந்து அணி மெக்சிகோவுக்கு எதிராகக் களமிறங்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles