தங்கம் வென்று பேராக் மாநிலத்திற்கு பெருமை சேர்த்த சதுரங்க நாயகன் தர்வின் சிவசண்முகம்!

ஈப்போ ஜூலை 2-
பேராக் மாநிலத்தின் ஆசிய சதுரங்கச் சங்கத்தின் (ACS) முன்னாள் மாணவரும், தற்போது தேசிய மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியின் பயிலும் 4ஆம் படிவத்தில் கல்வி கற்று வரும் தர்வின் சிவசண்முகம் நாட்டிற்கும் இந்திய சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தேசிய சதுரங்க வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சுமார் நான்கு மாதங்களில் வெறும் நான்கு போட்டிகளில் 2026 ஆம் ஆண்டு ஜூன் 6 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்ற Majlis Sukan Sekolah Malaysia (MSSM) தேசிய சதுரங்கப் போட்டியின் 18 வயது உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது மட்டுமின்றி, இப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பேராக் மாநிலத்தின் முதல் ஆண் வீரர் என்ற சிறப்பையும் பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

சதுரங்க உலகில் போரா முன்னேற வரும் தர்வின் சிவசண்முகம், 2021 முதல் 2026 வரை (MSSM) தேசியப் போட்டிகளில் இடைவிடாது பங்கேற்று குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு நான்காம் இடத்தையும், 2025-ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தையும் பெற்ற இவர், 2026-ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டி தேசிய சாம்பியனாகத் திகழ்ந்துள்ளார்.

2026-ஆம் ஆண்டில் மலேசிய மாணவர் ஒலிம்பியாட் (MSSD) போட்டியிலும் முதலிடம், பேராக் மாநில அளவிலான (MSSPK) போட்டியில் முதலிடம் வென்று அடுத்ததாக தேசிய (MSSM) தேசியப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று “மாநிலம் முதல் தேசியம்” என்ற வெற்றிப் பயணத்தை சிறப்பாக நிறைவு செய்துள்ளார்.

தேசிய மட்டத்தோடு நின்றுவிடாமல் அனைத்துலக அரங்கிற்காக ஆர்வக்கனியும் ஏற்றுள்ளார்.

2025-ஆம் ஆண்டு மலேசிய சதுரங்கக் கூட்டமைப்பின் (Malaysian Chess Federation) நடத்திய National Scholastic Chess Championship போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். அதே ஆண்டில் பங்குபெற்ற 19th Asian Schools Chess Championship போட்டியின் போப்போடியும் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறும் Commonwealth Youth Chess Championship போட்டியிலும் பங்கேற்கும் இடத்தைப் பெற்றுள்ளார்.

இடைநிலைப்பள்ளி மட்டுமல்லாது பேராக் மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

விடாமுயற்சி, கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் உயரிய வீரர்களின் பட்டியலில் தர்வின் சிவா இணைந்துள்ளார்.

இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். அவரது சாதனைகளை ஆசிய சதுரங்க சங்கத்தின் தலைவர், தமிழ்ப்பள்ளி, தேசிய மெதடிஸ்ட் (ACS) இடைநிலைப்பள்ளி, பேராக் மாநிலம் மற்றும் மலேசியா முழுவதும் பெருமை சேர்த்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles