

ஈப்போ ஜூலை 2-
வரும் ஜூலை 25 26 ஆம் தேதிகளில் ஈப்போ கல்லு மலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் தேசிய திருமுருகன் மாநாடு நடைபெறுகிறது.
பேராக் மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில் 2,000 பேர் கலந்து கொள்கிறார்கள்.
தமிழ் நாடு, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து, முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நாட்டில் உள்ள பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
அரசியல் வேறுபாடு இன்றி அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் இந்த மாநாடு வெற்றிகரமாக நடத்தப்படும்.
இங்கு அரசியல் இல்லை. தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாநாடு அமைந்திருக்கும்.
ஒட்டுமொத்த தமிழர்களின் மாபெரும் தமிழ் கடவுளாக முருகப்பெருமான் விளங்குகிறார்.
அந்த வகையில் நடத்தப்படும் இந்த திருமுருகன் மாநாடு உலக வரலாற்றில் இடம் பிடிக்கும் என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.

