
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்து ஆலயங்களுக்கான மானியம் இவ்வாண்டு 25 லட்சம் வெள்ளியாக அதிகரிக்கப்படுவதாக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்துள்ளார்.
இந்த மானியத் தொகை அதிகரிப்பு தொடர்பான சில நடைமுறைகள் முழுமை பெற்றப் பின்னர் இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
தொடக்கத்தில் 10 லட்சம் வெள்ளியாக இருந்த ஆலயங்களுக்கான வருடாந்திர மானியம் பின்னர் 18 லட்சம் வெள்ளியாக உயர்த்தப்பட்டு தற்போது 25 லட்சம் வெள்ளியாக அதிகரிப்பு காண்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா ஸ்ரீ சுவர்ண மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிலையிலான பொங்கல் விழாவுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

