அமைச்சர் சிவக்குமார் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முழு ஆதரவு!
இந்தியர்களின் குடியுரிமைட பிரச்சனைக்கு அரசு தீர்வு காண வேண்டும்!
சிகாமாட் எம் பி. யூனிஸ் வரன் அறிவிப்பு

மனித வள அமைச்சர் சிவக்குமார் தலைமையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகள் குறித்து நேரடியாக முன் வைக்கப்பட்டது.

பிரதமருடன் நடத்தப்பட்ட இந்த சந்திப்பில்
குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம்,
இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாடு, அரசாங்க துறைகளில் வேலை வாய்ப்புகள், இந்து ஆலயங்கள், உயர் கல்வி வாய்ப்புக்கள், குடியுரிமை உட்பட பல பிரச்சனைகள் குறித்து மனித வள அமைச்சர் சிவகுமார் பேசியது மிகவும் பாராட்டுக்குரியது என்று சிகாமாட் எம்பி யூனிஸ் வரன் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக மனித வள அமைச்சர் சிவகுமார் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு எனது சார்பில் முழு ஆதரவை வழங்குவேன் என்று அவர் சொன்னார்.

இதனிடையே இந்நாட்டில் இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் குடியுரிமை பிரச்சனைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles