
இந்நாட்டில் இந்திய சமுதாயத்திற்காக ஐபிஎப் கட்சியின் போராட்டம் தொடரும் என்று அதன் தலைவர் டத்தோ லோகநாதன் தெரிவித்தார்.
ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட ஐபிஎப் கட்சி அதன் போராட்டங்களில் இருந்து பின் வாங்காது என்று அவர் சொன்னார்.
இதனிடையே ஐபிஎப்
கட்சியின் தலைவராக டத்தோ லோகநாதன், துணைத் தலைவராக டத்தோ வேலாயுதம், உதவித் தலைவர்களாக அப்பளசாமி, மோகன், மகேந்திரன், பன்னீர் செல்வம், இளஞ்செழியன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
மத்திய செயலவைக்கு 14 பேர் தேர்வு பெற்ற வேளையில் இளைஞர் பகுதித் தலைவராக கணேஷ் குமார் சம்பந்தன், மகளிர் பிரிவு தலைவியாக திருமதி ராஜம்மா பெருமாள் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட சற்குணம் நடேசன் தெரிவித்தார்.

